×

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் வரத்து குறைவால் ‘வறுத்தெடுக்கும்’ சின்ன வெங்காயம்: கிலோ 200க்கு மேல் விற்பனை

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மார்க்கெட். இந்த மார்கெட்டிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படும். இங்கிருந்து கேரள மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும். தினமும் ரூ.5 கோடி முதல் ரூ.7 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.

இந்நிலையில், கடந்த 10 தினங்களாக இந்த மார்க்கெட்டிற்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்த காரணத்தாலும் அதிகப்படியாக வெயிலின் தாக்கத்தால் ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள பகுதிகளில் சின்ன வெங்காயம் வரத்து இல்லாமல் போனதாலும் இதன் விலை படிப்படியாக உயர்ந்து உச்சகட்ட விலையாக தரமான சின்ன வெங்காயம் ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையானது. தினசரி ஒவ்வொரு கடைகளுக்கும் 50 டன் வரக்கூடிய சின்னவெங்காயம் தற்போது ஒரு டன் அளவு கூட வராமல் வரவு குறைந்துள்ளது இந்த விலை உயர்வுக்கு காரணம். இந்த வெங்காயம் இங்கிருந்து வண்டி வாடகை, கூலி மற்றும் இதர செலவுகள் என அதிகரிப்பதால் 200 க்கு விற்பனையாகிறது. இதனால் இதை அன்றாட தேவைக்கு வாங்கி பயன்படுத்தும் பொதுமக்கள் பாதிப்படைய கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தக்காளி விலை உயர்வால் அதனை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து அரசு தற்போது ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர் அதேபோல் சின்ன வெங்காயத்தையும் கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது இந்த விலை உயர்வு இன்னும் ஒரு மாத காலத்திற்கு இருக்கும் என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். படம். ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள சின்ன வெங்காயம்

The post ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் வரத்து குறைவால் ‘வறுத்தெடுக்கும்’ சின்ன வெங்காயம்: கிலோ 200க்கு மேல் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Ottenchatram ,Ottanchatram ,Dindigul District ,Ottanchatram Gandhi Vegetable Market ,Tamil Nadu ,Otanchatram ,Dinakaran ,
× RELATED ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து...